மூலதனம்



சரக்கும் -பணமும் என்ற முதல் அத்தியாயத்தில் சரக்கின் இரு காரணிகள் அதாவது பயன் -மதிப்பு பரிவர்த்தனை -மதிப்பு இன்னும் கறாராக சொல்வது என்றால் மதிப்பின் சாரமும் -மதிப்பின் பருமனும் இவற்றை புரிந்து கொள்ள நாம் வாழும் இந்த முதலாளித்துவ உற்பத்தி நிகழும் சமுகத்தில் அனைத்து செல்வங்களும் சரக்குகளின் வடிவில் தான் காட்சி அளிக்கிறது.

 எனவே நமது ஆராய்ச்சி அதில் குறிப்பாக தனிச் சரக்கை எடுத்து பகுப்பாய்வு செய்வது

முதலில் சரக்கு என்பது நமக்கு வெளியே இருக்கும் ஒரு பொருள்

அது அதன் குணங்களை கொண்டு ஏதேனும் ஒரு விதத்தில் மனிதர்களின் தேவையை நிறைவு செய்கிறது அது மனதின் இச்சை ஆனாலும் உடலில் பசியானாலும் சரிதான் எல்லாம் ஒன்றுதான்

இந்த தேவைகளை சரக்கு நேரடியாக வாழ்வின் உணவு,உடை இன்னும் பிற இந்த வழியில் அது வாழ்வு சாதனமான முறையில் அல்லது இந்த வாழ்வு சாதனங்களை உற்பத்தி செய்யும் உற்பத்தி சாதனங்களாக எந்த முறையில் சரக்கு பயன்படுகிறது என்பது நமக்கு தற்போது தேவையில்லை

இரும்பு, காகிதம் இவற்றை உதாரணமாக எடுத்துக் கொள்வோம் இவை இரண்டும் ஏதேனும் ஒரு வழியில் பயனுள்ள பண்டங்கள் அதே சமயம் பண்பு, அளவு வழியில் பார்த்தால் இரண்டும் இரு வேறாக பார்க்கலாம்

பண்டங்களின் பயனை எந்த வகையில் பயன்படுத்தப்படும் என்பது வரலாறு சொல்லட்டும் காந்தக்கல் எடுத்து கொள்வோம் அது இரும்பை ஈர்க்கும் தன்மை கொண்டது ஆனால் அது தூருவத்தை காட்டுகிறது என்பதை கண்டுபிடித்த பிறகு அதன் பயன்மதிப்பு வேறாகியது மனிதர்களின் கடல்வழி,கானக வழிக்கு உதவியது 

மேலும் பண்டங்கள் இன்னின்ன அளவுகளில் தருவதும்,பெறுவதும் இடத்திற்கும்,காலத்திற்கும்,நாடுகளுக்கும் வேறுபாடு இருக்கும் அது அந்த சமுகத்தின் வளர்ச்சி நிலையை பொறுத்தது

ஒரு பொருளின் பயன்பாடு அதை பயன் மதிப்பு ஆக்குகிறது அதே சமயம் அந்த பொருளின் பயன்பாடு என்பது ஏதே நமது மனதிற்குள் இல்லை அந்த சரக்கின் உள்ளார்ந்த பண்பு அதற்கு அப்பாற்பட்டு அதற்கு வாழ்வில்லை உதாரணமாக சர்க்கரை என்பது எழுத்தில் இருப்பதால் அது இனிப்பு இல்லை உண்மையில் சர்கரையை கையில் எடுத்து வாயில் போட்டுக் கொண்டால் இனிக்கும் ஆக சரக்குகளின் இந்த குணத்தை நாம் அறிந்து கொள்ள உழைப்பின் அளவை கொண்டு நாம் தீர்மானிப்பது இல்லை

ஆனால் நாம் பரிசீலிக்கும் முதலாளித்துவ சமுகத்தில் அந்த சரக்குகள் பரிவர்த்தனை -மதிப்பு அதாவது பொருளாதாய சேமிப்பகங்களாகவும் உள்ளது

அதில்,
குறிப்பிட்ட சரக்கு,பல சரக்குகளுக்கு குறிப்பிட்ட அளவு, அதாவது ஒரு கிலோ கோதுமை -100 கிராம் கருப்புச்சாயம்க்கு,-20 மீட்டர் பட்டுத் துணிக்கு,-2 கிராம் தங்கத்திற்கு என்று எதை வைத்து பரிமாற்றம் நிகழ்கிறது ஏன் குறிப்பிட்ட அளவுகள் விகிதாச்சாரம் மாறுகிறது

கோதுமைக்கும்-தங்கத்திற்கும் இந்த அளவு தான் பரிவர்த்தனை என எதை வைத்து தீர்மானம் ஆகிறது இவை இரண்டுக்குள்ளும் ஏதோ ஒன்று சமமாக,சமமான அளவில் இருக்கிறது என்பதை இந்த பரிவர்த்தனையில் புரிந்து கொள்ள முடிகிறது

ஆக இன்னின்ன அளவு என்ற கணக்கில் சொல்வதாலும், அந்த சரக்குகளுக்கு உள் இருக்கும் அதன் தன்மையும் இல்லை என்பது நாம் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது அது பயன் மதிப்பை தாண்டியது என்பதும் நிரூபணம் ஆகிறது

இனி நாம் பயன் -மதிப்பு அதை ஒரு ஓரமாக வைத்து விட்டு பரிவர்த்தனை ஆகும் அந்த மதிப்பை மட்டுமே கணக்கில் எடுத்து ஆராய்ந்தால்

இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் மனித உழைப்பை கொண்டு ஏதேனும் பயன் மதிப்பாக மாற்றுவது மனித உழைப்பு என்பது தெளிவாகிறது அது "அருவமான "மனித உழைப்பு "சக்தி" அது பொருட்கள்உற்பத்திக்குசெலவிடப்பட்டு இருக்கிறது பொருள் வடிவமாக மதிப்பாக இறுகி இருக்கிறது அதுவே சமுக சாரத்தில் அவையே "மதிப்புகள்"(values)

ஒரு பொருளை பயன் -மதிப்பு ஆக்குவது ஸ்துலமற்ற மனித உழைப்பு அதில் உருக்கொண்டு உள்ளது (human labour in the abstract) 
இந்த பயனுள்ள பண்டத்தில் அடங்கி இருக்கும் மதிப்பை பருமணை அளப்பது எப்படி?

பண்டத்தில் அடங்கி இருக்கும் உழைப்பின் அளவை கொண்டு அது எவ்வளவு நேரம், நாள், மணி என்ற திட்டமான அளவை கொண்டு என்பது தெளிவு

ஒரு சரக்கின் மதிப்பு அதுக்காக செலவு செஞ்ச நேரத்தை வைத்து னு எடுத்தால் ஒரு உழைப்பாளி சோம்பேறி யா இருந்தா அந்த பண்டத்தின் மதிப்பு எப்படி நிர்ணயம் செய்வது?

 மதிப்பின் சாரமாகிய உழைப்பு ஒருபடித்தான மனித உழைப்பு (homo-geneous human labour) ஒரே சீரான உழைப்பு சக்தியின் செலவீடு 

  எண்ணற்ற தனித் தனி அழகுகளால் ஆனது மனித உழைப்பு என்றாலும் இங்கே மனித உழைப்பு சக்தியின் (human labour -power) ஒரே படித்தான "திரளாக"கணக்கிடப்படுகிறது அந்த அழகுகள் ஒவ்வொன்றும் "சமுதாயத்தின் சராசரி உழைப்பு சக்தியின் தன்மையை கொண்டு உள்ளது 

ஆக ஒரு பண்டத்தை உற்பத்தி செய்ய ஆகும் நேரம் சராசரியாக தேவைப்படும் நேரம்

அதாவது" சமுக வழியில் அவசியமான உழைப்பு நேரம் "

உழைப்பு நேரம் என்பது, இயல்பான உற்பத்தி நிலமை,அந்த நேரத்தில் வழக்கில் இருக்கும் சராசரி தேர்ச்சி (skill), மும்முரம் (intensity) இவைகளை கொண்டு அளவிடப்படுகிறது

உதாரணமாக இங்கிலாந்தில் விசைத்தறி வந்த போது 20 மீட்டர் நூலை துணியாக மாற்ற தேவைப்படுகிற உழைப்பு நேரம் 5 மணி நேரமாக குறைந்து விட்டது அதே போது கைத்தறியில் அதே அளவு நூலை துணியாக மாற்ற 10 மணிநேரம் ஆனாலும் கூட இவர்களின் உழைப்பு சமுதாய அளவில் சரிபாதியாக குறைந்து விட்டது என்பதை பார்க்கிறோம்

இனி நாம் சரக்குகளின் அதில் அடங்கி இருக்கும் மதிப்பை பருமணை சமுக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தால் அளவீடு செய்கிறோம் என்பது தெளிவாகிறது

தோழர்களே இனி நாம் இந்த சரக்குகளின் "சாரம்" மனித உழைப்பு அதன் பரிவர்த்தனை -மதிப்பு அதில் அடங்கி இருக்கும் உழைப்பின் ஸ்துலமற்ற வடிவம் அதன் "பருமன்"  பரிவர்த்தனைமதிப்புஇது ஒரு அளவுவழிபட்ட உறவாக அதாவது ஒரு சரக்கிற்கு ஈடாக வேறொரு சரக்கை இன்னின்ன அளவுகளில் பரிவர்த்தனை செய்வது என்பது ஏதோ தற்செயலாக ஒப்பீட்டளவில் தோன்றுகிறது அதுவும் காலத்திற்கு காலம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது ஆக சரக்குகளின் உள்ளார்ந்த இந்த பரிவர்த்தனை -மதிப்பு என்பது ஏதோ ஒரு முரண்பாட்டை தாங்கி நிற்கிறது நமது சொற்களில் ஏன்

Comments

Popular posts from this blog

மார்க்ஸ்