Posts

Showing posts from April, 2023

குடும்பம் அரசு தனிச் சொத்து -ஏங்கல்ஸ்

Image
மனித குலம் கற்பனையில் உருவாக்கி வந்த காலத்தில் ஏதோ அவன் மட்டும் உலகின் தனிப்படைப்பு என்று சொல்லி வந்தனர் அந்த கற்பனையை அடித்து நொறுக்கி மனித குலத்தின் வளர்ச்சியை முதன் முதலில் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் பல்வேறு விஞ்ஞான பூர்வமாக விளக்கி மதக் கொள்கைகளை தூக்கி விசினார் சார்லஸ் டார்வின். சார்லஸ் டார்வின் தன் பரிணாம தத்துவம் மூலம் குரங்கு இனத்தின் ஒரு கிளை வழியாக மாற்றம் அடைந்து வந்தவர்கள் தான் மனிதர்கள் என்றார். இதை தொடர்ந்து பாஹ்பென் மனித குலத்தின் வளர்ச்சியை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் மூலம் தாய் வழி சமுக வளர்ச்சியை விளக்கினார். ஆனால் அவர் மத கருத்தியலில் இந்த வளர்ச்சியை ஆய்வுக்கு உட்படுத்தி அந்த சிந்தனையோடு பார்க்கும் போது அன்று வாழ்ந்த மக்களின் வாழ்வை "பொது மகளிர்" என் வர்ணித்தார்.  பின்னாட்களில்  இந்த கருத்தை ஏங்கல்ஸ் விமர்சனம் செய்து இருக்கார் பின்னர் மார்கன் மனித குலத்தின் வளர்ச்சியை அமெரிக்கா செவ்விந்திய மக்களுடன் வாழ்ந்து ஆய்வு செய்தார். அவர் கணம், குலம் இவற்றிற்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை விளக்கினார் அதே நேரம் மனித குலத்தின் வளர்ச்சியை விளக்கினார். உற...