குடும்பம் அரசு தனிச் சொத்து -ஏங்கல்ஸ்
மனித குலம் கற்பனையில் உருவாக்கி வந்த காலத்தில் ஏதோ அவன் மட்டும் உலகின் தனிப்படைப்பு என்று சொல்லி வந்தனர் அந்த கற்பனையை அடித்து நொறுக்கி மனித குலத்தின் வளர்ச்சியை முதன் முதலில் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் பல்வேறு விஞ்ஞான பூர்வமாக விளக்கி மதக் கொள்கைகளை தூக்கி விசினார் சார்லஸ் டார்வின்.
சார்லஸ் டார்வின் தன் பரிணாம தத்துவம் மூலம் குரங்கு இனத்தின் ஒரு கிளை வழியாக மாற்றம் அடைந்து வந்தவர்கள் தான் மனிதர்கள் என்றார்.
இதை தொடர்ந்து பாஹ்பென் மனித குலத்தின் வளர்ச்சியை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் மூலம் தாய் வழி சமுக வளர்ச்சியை விளக்கினார்.
ஆனால் அவர் மத கருத்தியலில் இந்த வளர்ச்சியை ஆய்வுக்கு உட்படுத்தி அந்த சிந்தனையோடு பார்க்கும் போது அன்று வாழ்ந்த மக்களின் வாழ்வை "பொது மகளிர்" என் வர்ணித்தார்.
பின்னாட்களில் இந்த கருத்தை ஏங்கல்ஸ் விமர்சனம் செய்து இருக்கார்
பின்னர் மார்கன் மனித குலத்தின் வளர்ச்சியை அமெரிக்கா செவ்விந்திய மக்களுடன் வாழ்ந்து ஆய்வு செய்தார்.
அவர் கணம், குலம் இவற்றிற்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை விளக்கினார் அதே நேரம் மனித குலத்தின் வளர்ச்சியை விளக்கினார்.
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி உற்பத்தி உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது அந்த மாற்றம் மனித சமூகத்தின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றார்.
இதே போல மாக்லெனன் தன் ஆய்வை மனித சமுதாயத்தின் வளர்ச்சியை ஆய்வுக்கு உட்படுத்தி தன் ஆய்வை வக்கீல் போல விளக்க முற்பட்டார்.
அவரின் விளக்கம் அகமனம் குலத்தின் உள்ளே திருமணம் செய்வது புற மணம் குழுக்கள் குலத்தின் வெளியே ஆண் பெண் திருமணங்களை விளக்கினார்.
ஆனால் அக மணம் புற மணம் அதற்கான இயற்கை தேர்வை நிராகரித்தார் மார்கன் தன் ஆய்வில் இதை விளக்கி தெளிவு படுத்தினார்.
இந்த வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வதை இயக் இயல் ரீதியாக சமுக மாற்றத்தை மார்க்ஸ் ஏங்கல்ஸ் இருவரும் விளக்கி அதன் வளர்ச்சியின் காரணமாக குடும்ப அமைப்பு மற்றும் அதன் வழியாக தனிச் சொத்து அதன் வளர்ச்சியும் காரணமாக அரசின் தோற்றம் அதன் தேவையின் கட்டாயம்.
அரசு வர்கங்கங்களுக்கு இடையில் ஏற்படும் வர்க்க போராட்டத்தை சமரசம் செய்து வைக்க உருவாக்க பட்டது என்றனர்.
குடும்ப அமைப்பின் வளர்ச்சியில் முதல் வர்க்க வேறுபாடு முதல் அடிமை பெண் என்பதையும் இந்த குடும்ப அமைப்பு தனிச்சொத்தை அடிப்படையாக கொண்டது என்றும் விளக்கினர்.
இந்த தனிச் சொத்து அதை பாதுகாக்கும் குடும்ப அமைப்பு இதை சிதைக்காமல் பெண் விடுதலை வர்க்க விடுதலை சாத்தியம் இல்லை மேலும் இந்த வர்க்க ஏற்ற தாழ்வுகளை பாதுகாக்கும் அரசு என்ற கட்டமைப்பை மாற்றி அமைக்காமல் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி சாத்தியம் இல்லை.
அது வர்க்கப் போரின் புரட்சியின் மூலம் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்று உறுதியாக இந்த மாற்றத்தை முன் யூகித்தனர் மார்க்ஸ், ஏங்கல்ஸ்.
Comments
Post a Comment