யாத்திசை திரைப்படம்
பெரும் அரசுகளின் அஸ்திவாரத்தை அலாதியாய் தொட்டுச் சென்றது அதன் ஆவலில் மன்னர்களின் இருப்பு கேள்விக்கு உள்ளாகியது மன்னர்களின் மகுடங்கள் மக்களின் நெஞ்சாசனத்தில் இல்லை அதன் அதிகாரத்தின் அதிகாரத்தை தக்க வைப்பதில் அதிலே நிலை கொண்டு உள்ளது என்றது காடாலும் எயினன் இனத்தவர் நாடாளும் அந்த அதிகாரத்தை எடுக்கத் துணிந்தது எதிர்கால எயின இனத்தவர் காடோடியாய் கலைத்துப் போய் விடக்கூடாது நாடாளும் நாகரீகத்தை பரிசளிக்க விரும்பி காட்டின் விதிகளை நாட்டில் பரிசீலனைக்கு விட்டான் அந்தோ பரிதாபம் தன் காடோடிகளுடன் இணைந்து நாடாளும் மன்னனின் தலைக்கவசத்தை தன் இடது காலால் தட்டிப் பறித்தான் ஆனால் அதிகாரங்களின் அதிகாரம் அதிகாரச் சேர்ப்பு தான் நாடாளும் நந்தவனம் அங்கு நரிகள் மட்டுமே நாட்டாமை செய்யும் தன் அதிகாரப் பசிக்கு அனைத்தையும் பழிகொள்ளும் என்ற பரமபத விளையாட்டு பயின்று கொள்ளும் முன்னர் அவன் அமர்ந்த ஆசனத்தை உலுக்கி வேராடு வேராக தலைக் குப்புற சாய்ந்தான் நாட்டை ஆள்பவன் தன் அதிகாரத்தை பறித்தவனின் நெஞ்சில் வாலேத்திக்கொள்ள அதிகாரத்தை ஆதாரப்படுத்த வேளிர் என்னும் காடோடி குழுவை தன் வசப்படுத்தி எயினர் இன ...