மூலதனம் முன்னுரைகள்
அன்பார்ந்த தோழர்களே, மூலதனம் வாசிப்பில் முன்னுரையில்
முதல் ஜெர்மன் பதிப்புக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய முன்னுரை வாசிக்க ஆரம்பித்தோம் அதில்
பொதுவாக முதலாளித்துவ பொருள் உற்பத்தி மற்றும் அதன் இயக்கையான சமுக பகைமைகளினால் ஏற்படும் இவற்றை குறைவான தொழில் வளர்ச்சி அடையும் நாடுகள் வளர்ந்த நாடுகளை பார்த்து கற்றுக் கொள்ள முடியும் என்கிறார்
மேலும் ஜெர்மனியில் முழு அளவில் தொழில் வளர்ச்சி அடையவில்லை அதே போது முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறை தொழில் சாலைகளில் மிக மோசமாக உள்ளது ஏனெனில் இங்கிலாந்தில் இருப்பது போன்ற தொழில் சாலை சட்டங்கள் ஜெர்மனியில் இல்லை அதே போது பழமையான உற்பத்தி முறையின் மீத மிச்சங்கள் அதனால் ஏற்படும் கேடுகள் அதாவது "வாழ்பவற்றினால் மட்டும் இன்றி மான்டவற்றாலும் அவதி படுகிறோம்" என்கிறார்
குறிப்பாக முதலாளி,நிலச்சுவான்தார் இவர்களை கண்கவர் வண்ணத்தில் காட்டவில்லை அதேபோது தனியாட்களை இங்கே (மூலதனம் புத்தகம்) குறிப்பிடுவது அவர்கள் வர்க உறவுகள்,வர்க நலனிலும் அளுருவம் என்ற அளவில் மட்டுமே என்கிறார்
அரசியல் பொருளாதார துறையில் சுதந்திரமான விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி சந்திப்பது மற்ற எல்லா துறைகளிலும் சந்திக்கின்ற பொதுவான எதிரிகளை மட்டும் இல்லை இந்த விஞ்ஞான ஆராய்ச்சி ஆராய்கின்ற பொருளின் விசேஷ தன்மை மனித நெஞ்சங்களில் திளைத்து இருக்கும் மிக உக்கிரமான, மிகவும் இழிவான,குரோதமான உணர்சிகளை அதிலும் தனிச்சொத்து உரிமையின் நலனில் ஆவேசம் கொண்ட உணர்வுகளை
இது யுத்த களத்தில் எதிரிகளாக நேர் நின்று சந்திக்கிறது உதாரணமாக
திருச்சபையின் 39 விதிகளில் 38 விதிகள் மீதான தாக்குதல் ஏன் நாத்திகத்தையும் கூட மன்னித்தாலும் மன்னிக்கும் தனது வருமானத்தில் 39/1 அதன் மீது தாக்குதல் தொடுத்தால் மன்னிக்கவே மன்னிக்காது
நிலவும் சொத்து உடமை, அதன் உறவுகள் அதன் மீதான விமர்சனம் மேலும் இந்த சமுகம் மாறாத கல்லுருவம் இல்லை "மாற்றத்திற்கு உரிய உயிரமைப்பே"
மேலும் விஞ்ஞான ரீதியான விமர்சனங்கள் அபிப்பிராயம் என எதை கொண்டு வந்தாலும் காது கொடுத்து கேட்கலாம் அதை விட்டு பொதுஜன அபிப்பிராயம் என அவர்களின் "விருப்பு வெறுப்புக்களை"எடுத்து வந்தால் அவர்களுக்கு ப்ளோரன்ஸ் கவிஞனின் வார்த்தை தான் என் பதில் " உனது வழியில் நீ செல் பேசுவோர் பேசட்டும்"
ரிக்கார்டோ வின் அரசியல் பொருளாதாரம் துறையில் விஞ்ஞான ரீதியாக பழைய மரபுகள் மீது விமர்சன பார்வையும்,அதே சமயத்தில் கொச்சை படுத்தி விமர்ச்சிக்கும் போக்கும் வளர்ச்சி அடைந்து இருந்தது
குறிப்பாக நவீன தொழில் வளர்ச்சி 1825 ஆம் வருடத்தில் நெருக்கடியுடன் தொடங்கியது
பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து முதலாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றியது
இதே காலகட்டத்தில் கூலிக்கு அமர்தப்பட்ட பொருளாதார அறிஞர்கள் அதிகமாயினர் இதனால் விஞ்ஞான ரீதியான பொருளாதார ஆய்வு தேங்கியது
1848-49 காலத்தில் கண்டந்தழுவிய புரட்சியின் பிரதிபலிப்பு இங்கிலாந்தில் காணப்பட்டது பாட்டாளி வர்க்க கோரிக்கையை தமது வர்க்க லாபத்தை காக்க பயன் படுத்தி கொண்டனர் இதன் விளைவுகள் அவியல் வாதம் வளர தொடங்கியது அதன் மிக சிறந்த பிரதிநிதியாக ஜான் ஸ்டுவர்ட் மில் இருந்தார்
தாஸ் கேப்பிட்டல் புத்தகம் ருஷ்ய மொழிபெயர்ப்பு 1872 வெளிவந்தது 3000 பிரதிகள் விற்பனையானது
1871 ல் கீவ் பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதார பேராசிரியர் நி.சீபர் "மதிப்பு மற்றும் மூலதனம் பற்றிய டேவிட் ரிக்கார்டோவின் தத்துவம்" என்றாதம்முடைய புத்தகத்தில் மதிப்பு, பணம், மூலதனம் இவை பற்றிய மார்க்சின் தத்துவம் அதன் அடிப்படை ஸ்மித், ரிக்கார்டோ ஆகியோரின் அவசியமான தொடர்ச்சியானது என குறிப்பிடுகிறார்
மேலும் அவரது மூலதனம் நூலை விமர்ச்சித்து விமர்சனங்கள் வருகின்றது அவைகளில் சிலவற்றை எடுத்து காட்டுகிறார் மேலும் தன்னுடைய ஆய்வு முறை எத்தகையது என்பதையும் மூலதனம் புத்தகத்தை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்து விமர்சனம் செய்து இருப்பதை நமக்கு இம் முன்னுரையில் எடுத்து காட்டுகிறார்
Comments
Post a Comment