மூலதனம் முன்னுரைகள்

அன்பார்ந்த தோழர்களே, வணக்கம்
நாம் மூலதனம் வாசிப்பில்


ஆங்கில பதிப்புக்கு ஏங்கல்ஸ் எழுதிய முன்னுரை ல் 1883 ல் மார்க்ஸ் மரணத்திற்கு பிறகு மார்க்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்ய குறிப்புகள் விட்டு சென்றார் அதை அடிப்படையாக கொண்டு டாக்டர்.மூர், திருமதி அவலிங், மற்றும் தோழர் அவலிங் ஆகியோர் ஆங்கில மொழி பெயர்ப்பு செய்துள்ளனர் என்பதை கண்டோம் மேலும்

மூலதனம் வாசிப்பில் மார்க்சிய கலைச்சொற்கள் பற்றியும் அதன் அவசியம் பற்றியும் விளக்கினார் ஏங்கல்ஸ் அதே சமயம் மார்க்ஸ்சின் மூலதனம் புத்தகம் பல்வேறு ஆய்வாளர்களால் பொருள் விளக்கம் தந்து அர்தத்தை மாற்றுகின்றனர் எனவே இந்த ஆங்கில மொழி பெயர்ப்பு அவசியம் என்றார் ஏங்கல்ஸ்

மார்க்ஸ் மேற்கோள் காட்டும் முறை வரலாற்று ஆவணமாக விளங்குகிறது என்கிறார்

மூலதனம் முதல் பாகம் தன்னளவில் முழுமையானது மேலும் இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் இன்றி முழுமை  ஆகாது

மேலும் ஆங்கிலேய பொருள் உற்பத்தி முறை பெருக்கல் வீதத்தில் விரிவடைகிறது சந்தை கூட்டல் வீதத்தில் உள்ளது
மேலும் குறிப்பாக 1825 முதல் 1867 வரையிலான தேக்கநிலை, செழிப்பான காலகட்டம்,மிகை உற்பத்தி, இதன் விளைவாக ஏற்படும் நெருக்கடி அதன் விளைவாக ஒவ்வொரு பத்தாண்டும் வேலை இல்லாத மக்கள் ஏக்கத்துடன் செழிப்பான காலகட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் இந்த வேலை இல்லாதேர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி முதலாளித்துவ பொருள் உற்பத்தி மூட்டு சந்தில் நிற்கிறது என்கிறார் ஏங்கல்ஸ் 1886 நவ -5


ஜெர்மன், பிரெஞ்சு பாதிப்புகளுக்கு கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதிய முன்னுரை ,பின்னுரை  வாசித்தோம் அதில் ஜெர்மன் பதிப்புக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய முன்னுரை வாசிக்க ஆரம்பித்தோம் அதில் 1867 ல் மூலதனம் வெளிவந்தது 

மற்றும் மூலதனம் புத்தகத்தில் தன்னுடைய"அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு" என்ற புத்தகத்தில் தான் எதை எதை விரிவாக ஆய்வு செய்து இருந்தாரோ அவைகளை மூலதனம் நூலில் சுருக்கியும் அந்த புத்தகத்தில் எவை எல்லாம் சுருக்கி ஆய்வு செய்து இருந்தாரோ அவைகளை விரிவாகவும் எழுதி இருக்கிறார் என்பதை கண்டோம்

குறிப்பாக "மதிப்பின் சாரம்", "மதிப்பின் பருமன்" இவைகளை பற்றிய ஆய்வு  "சூக்கும படுத்தல்" முறையில் விளக்கி இருக்கிறார்  இந்த முறையில் ஆய்வு செய்யும் போது வரலாற்றில் பொருளாதாரம் அதாவது உற்பத்தி முறை, பரிவர்த்தனை, உற்பத்தி உறவுகள் எப்படி வளர்கிறது வளர்ந்து வந்தது அதன் இயங்கும் திசையில் "மூலதனம்" என்ற முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறை யின் "இயங்கு விதி" என்னவாக இருக்கிறது அதன் சகடம் தேக்கநிலை செழிப்பான காலகட்டம் மிகை உற்பத்தி நெருக்கடி இந்த நிலைமைகளின் காரணம் என்னவாக இருக்கிறது என்பதையும் இதை வாசிக்கும் வாசகர்கள் இது ஏதோ மற்ற நாடுகளுக்கான பிரச்சினை என்று எண்ணினால் கதை உங்களை பற்றயதே என்கிறார் மார்க்ஸ்.

அதில் முதலாளித்துவ பொருள் உற்பத்தி, மூலதனம் பற்றிய ஆய்வு எந்த அடிப்படையில் விமர்சனம் செய்து இருந்ததை நமக்கு மார்க்ஸ் எடுத்து காட்டுகிறார்.

அவரது ஆய்வு எத்தகையது  அவர் ஆய்வை முன் வைக்கும் விதம் உற்பத்தி உறவுகள் கூலி முறை மற்றும் நிலவாடகை ,உபரி  இவைகளின் முந்தைய கட்டங்கள் அக்கட்டங்களின் நிலவும் வடிவம், அதன் வளர்ச்சி கட்டங்கள் அதன் விளைவாக ஏற்படும் விளைவுகள் அதன் போக்கில் ஏற்படும் மாற்றங்கள் அம்மாற்றங்கள் அதனால் தவிர்க்க முடியாத உற்பத்தி உறவுகளின் வளர்ச்சி தேக்கம் மற்றும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி அதன் தேவையும் இவ்விளைவுகளால் சமுகத்தில் உருப்பெரும் சமுக சிக்கல் மற்றும் அதன் விளைவாக கூலி அமைப்பு முறையில் தவிர்க்க முடியாத வளர்ச்சி முரண்பாடு ஆக மார்க்ஸ் மூலதனம் நூலில் அவர் எழுத பயன்படுத்திய முறை "இயக்கவியல்" முறையை கையாண்டு எழுதி இருக்கிறார் என்பதை நம் விவாதத்தில் கண்டு கொண்டோம்

அவரது இயக்கவியல் வழிமுறை ஹெகலிய முறை மற்றும் ஹெகலின் இயக்கவியல் தத்துவார்த்த ரீதியில் கருத்தை தாங்கி இருந்தது அதை அதாவது ஹெகலின் இயக்கவியல் தலைகீழாக இருந்தது அதை மார்க்ஸ் நோராக்கி அம்முறையில் தன் மூலதனம் பற்றிய ஆய்வை எழுதி இருப்பதையும் 

தான் ஹெகலின் மாணக்கன் தான் என்பதையும் வலியுறுத்தினார்

இயக்கவியல் வழிமுறை தெரியாத பொருளாதார அறிஞர்கள் தலையிலும் சமுக நிலமை இயல்பாகவே அவர்கள் தலையில் புகுத்தி விடும் என மார்க்ஸ் விளக்கி அந்த முன்னுரையை முடிக்கிறார்

Comments

Popular posts from this blog

மார்க்ஸ்