யாத்திசை திரைப்படம்


  பெரும் அரசுகளின் அஸ்திவாரத்தை அலாதியாய் தொட்டுச் சென்றது அதன் ஆவலில் மன்னர்களின் இருப்பு கேள்விக்கு உள்ளாகியது

மன்னர்களின் மகுடங்கள் மக்களின் நெஞ்சாசனத்தில் இல்லை அதன் அதிகாரத்தின் அதிகாரத்தை தக்க வைப்பதில் அதிலே நிலை கொண்டு உள்ளது என்றது

காடாலும் எயினன் இனத்தவர் நாடாளும் அந்த அதிகாரத்தை எடுக்கத் துணிந்தது எதிர்கால எயின  இனத்தவர் காடோடியாய் கலைத்துப் போய் விடக்கூடாது நாடாளும் நாகரீகத்தை பரிசளிக்க விரும்பி காட்டின் விதிகளை நாட்டில் பரிசீலனைக்கு விட்டான் அந்தோ பரிதாபம்

தன் காடோடிகளுடன் இணைந்து நாடாளும் மன்னனின் தலைக்கவசத்தை தன் இடது காலால் தட்டிப் பறித்தான் ஆனால் அதிகாரங்களின் அதிகாரம் அதிகாரச் சேர்ப்பு தான் நாடாளும் நந்தவனம் அங்கு நரிகள் மட்டுமே நாட்டாமை செய்யும் தன் அதிகாரப் பசிக்கு அனைத்தையும் பழிகொள்ளும் என்ற பரமபத விளையாட்டு பயின்று கொள்ளும் முன்னர் அவன் அமர்ந்த ஆசனத்தை உலுக்கி வேராடு வேராக தலைக் குப்புற சாய்ந்தான் நாட்டை ஆள்பவன்

தன் அதிகாரத்தை பறித்தவனின் நெஞ்சில் வாலேத்திக்கொள்ள அதிகாரத்தை ஆதாரப்படுத்த வேளிர் என்னும் காடோடி குழுவை தன் வசப்படுத்தி எயினர் இன காடேடியின் கனவை கலைத்தான்

எயினர் இனத்தவன் வேளிர் இனத்தவர்களுடன் சண்டையிடும் போது தன்னால் தப்ப முடியாது என தெரிந்த பின் அவனின் ஆவேச அகங்காரம் ஆவேசமாய் அவசியமாய் தன் உயிர் வேட்கையை பார்ப்பவர்கள் நெஞ்சில் நுழைத்தான்

தேவரடியார் அவர்கள் வாழ்வின் வேதனையை வண்ண வண்ண காட்சிகள் இல்லாமல் வெறும் இசை வடிவாக இதயத்தை கீறி பார்த்தது கீறிய இடங்களில் வலியும் ரத்தத்தை வலியை நூற்றாண்டு வேதனையை காட்சிப்படுத்தி மனதில் சம்மனமிட்டு அமர்ந்து வெளியேற வழி இன்றி கண்களின் வழியே கண்ணீராய்

பிராமணியம் தன் அதிகாரத்தை என்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அருகிலேயே தன் செந்நாய் பிழைப்பை நடத்தியது நடத்திக் கொண்டும் இருக்கிறது என்பதை சற்றும் சமரசம் செய்யாமல் காட்சிப்படுத்தியது மின்னலின் வெளிச்சத்தை கண்களில் புகுத்தியது

என் மனதில் யாத்திசை அதன் காட்சிப்படுத்துதல் திரையெல்லாம் நிரம்பிய பேராவேஷம் நிச்சயம் அனைவரும் ஒரு முறையாவது மழையிலே நனைந்து விடுங்கள் என்பது போன்ற நான் சொல்வது தவறாகாது யாத்திசை திரைப்படத்தை திரையில் கண்டு களியுங்கள்

படத்தின் தொடக்கத்தில் ஒலித்த அதிகாரம் தன்னை இறுத்தி வைக்க மண், மொழி, இனம் என பெயர்களை தான் வேறு வேறாக வைக்கும் அதன் இறுதி நோக்கம் அதிகாரம் மட்டுமே இந்த வார்த்தைகள் திரை தன் இமையை மூடும் முன்னர் திரும்ப ஒலிக்கும் போது நிச்சயம் பார்ப்பவர்கள் இதயத்தை சில்லிட வைக்கிறது.

Comments

  1. தோழர் சிறப்பாக இருக்கு விமர்சனம். தூய தமிழில்... எழுத்து நடை 👌

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மார்க்ஸ்