இன்றைய இளைஞர்கள் அரசியல்

 அரசியல் பற்றிய புரிதல் இளைஞர்களுக்கு ஏன் வளரவில்லை.அரசு என்பது என்ன? அரசாங்கம் என்பது என்ன? இவைகளின் தேவை ஏன் ஏற்பட்டது அதை பற்றிய புரிதல் விவாதம் பெரிதாக இல்லை தாங்கள் நன்றாக வாழ்கிறோம் தங்கள் நண்பர்கள், சுற்றத்தார், உறவினர்கள் நன்றாக வாழ்கிறார்கள்.நல்ல சம்பளம் கிடைக்கும் இடத்தில் எது பற்றிய அக்கறையும் இல்லாமல் சுயதேவைகள் நிறைவேறுகிறது இவர்கள் ஆதரிக்கும் முதலாளித்துவ கட்சிகள் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு தேடுகிறதா? சீர்திருத்தம் செய்து தள்ளி போடுகிறதா?யோசிப்பதும் இல்லை அதற்கான தேவையும் இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசியல் படுத்த அவர்கள் அரசியலாய் சிந்திக்க நிச்சயம் அவர்களின் வாசிப்பு மார்க்சியமாக தான் இருக்கும் சமுகத்தை அதன் இயங்குநிலையை அதன் மாறுதலை புரிந்து மக்களின் பிரச்சினைக்கு அவர்கள் தீர்வு காண வேண்டும் மார்க்சியம் மட்டுமே மனித குலத்தின் மாமருந்து மார்க்ஸ் சொல்வது போல இதுவரை இருக்கும் இருந்த தத்துவங்கள் உலகை பற்றி வியாக்கியானம் செய்தது ஆனால் உலகைமாற்ற வேண்டும் அது தான் சங்கதி இது வரை உலகின் நடந்தது எல்லாம் வர்க்க போராட்டத்தின் வரலாறு தான் "போராடு" இது மட்டுமே உலகின் தாரக மந்திரம் போராட்டங்கள் இல்லாமல் எவராட்டமும் நின்றது இல்லை வாழ்வை விஞ்ஞான ரீதியாக பயில்வோம்.

Comments

Popular posts from this blog

மார்க்ஸ்